Breaking News
Loading...

Followers

Saturday, June 16, 2012

Info Post
அதிரடிக்காரன் 

தலைவா... க்ரேட் எஸ்கேப்!!!! என்ற பதிவின் மூலமாக நான் வாசிக்க தொடங்கிய பதிவு. நகைச்சுவை, கிண்டல், ரஜினி அப்பிடி இப்பிடி என்று ஒரு நாளில் அவரது மொத்த பதிவுகளையும் வாசித்து முடித்தேன். 



கவர்ந்தது 

சில வித்தியாசமான நகைச்சுவை வர்ணனைகள்.
சினிமாவை குறித்த கவுண்டரின் (தனது) பார்வை.

ALEXA RANK - Global 983,094 India Flag 114,774


வலைமனை 

நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். போடோகளுக்கு தனது பாணியில் உயிர் குடுத்து நகைச்சுவையாக கலாய்க்க கூடியவர். அவருடைய அனைத்து போட்டோ கமேன்ட்சையும் நான் டவுன்லோட் பண்ணி வைத்துள்ளேன். 



மேதை படத்தால் அடிவாங்கிய நண்பன் & வேட்டை செமையாக கலாய்த்து  இருப்பார். ஆனால் அடிக்கடி  காணாமலும் போய் விடுவார்.

அடிகடி காணமல் போவதால் ALEXA RANK இல் இவர் இல்லை.


கிரி BLOG 

BLOGGING MY PASSION என்று தொடங்கும் BLOG. பெரிய அளவில் அப்டேட் இல்லாவிட்டாலும் இவர் ரஜினியை குறித்து எழுதிய ஆர்டிகல்ஸ் சூப்பராக இருக்கும்
 
ALEXA RANK - Global 466,932 India Flag 62,362


இட்லிவடை 

வித்தியாசமான அரசியல், விளையாட்டு, சினிமா, நகைச்சுவை பதிவுகள் தான் இந்த பதிவரின் சிறப்பு. மேலும் தன்னை யார் வெளிக்காட்டாத ஒரு வெற்றிகரமான பதிவர். 2017 பேர் இன்றுவரை இவரை GOOGLE  மூலமாக தொடர்கிறார்கள்.

 

பெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.
நிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்
பிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.
சாதனை: திருமணம் ஆகவில்லை
காரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை
வேதனை: படிப்பவர்களுக்கு தெரியும்
நிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்
தற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்
நிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்
நிரந்திர கூட்டணி : ஓட்டை வடை
பிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )
அடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை
முணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்
கிடைக்குமிடம்: http://idlyvadai.blogspot.com
ஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, 
 இந்த ஒரு பயோ-டேட்டாவே அவரது எழுத்தை பற்றி கூறும்.
ALEXA RANK  - Global 1,845,642


ப்ளாகர் நண்பன்  

நல்லதொரு தொழில்நுட்ப கருத்துகளை உடனுக்குடன் அறியத்தரும் பதிவர். கிட்டத்தட்ட அவரது பதிவுகளை கொண்டு தான் எனது ப்ளாக்கை 70% வடிவமைத்து இருக்கிறேன்.

 

ALEXA RANK  - Global 138,484 India Flag 22,427


என் ராஜபாட்டை

கடந்த வருடம் ஜூலை மாதம் அளவில் எனக்கு அறிமுகம் ஆகிய பதிவு. ஆங்கில தலைப்புகளுடன் வந்த ஆரம்ப பதிவுகளுடன் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தது இந்த  ப்ளாக்.

 

எல்லா விதமான தலைப்பு கொடுத்தாலும் கட்டுரை எழுதுவார் போலும், எல்லா விதமான பிரிவிலும் பதிவுகள் பகிர்ந்து  விடுவார்.
நகைச்சுவை உணர்வுள்ள எழுத்துக்கள் பிளஸ். தலைப்புக்கள் தெரிந்தேடுப்பிலும் மனுஷன் கில்லாடி..

அஜித் விஜய் பற்றிய இவருடைய பதிவுகள் பிரபலம்.. எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால் நான் அதிகமாய் விரும்பி வாசித்த (எனது புக் மார்க் லிஸ்டில் 2ஆவது இடம் இவரது முகவரி தான்  உள்ளது) ஒரு ப்ளாகர் தானாகவே வந்து எனது பதிவிற்கு வந்து கமென்ட் போட்டது தான்..

 ALEXA RANK - Global 2,246,320


JACKIE SEKAR (பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும்)
பதிவுலகின் சிறந்த ஆங்கில பதிவுலக நாயகன் என்றால் கண்டிப்பாக  தான். என்னை அதிகமாக TORRENTZ பாவிக்க வைத்தவர். ஒரு ஆங்கில படத்தை வித்தியாசமான முறையில் அணுகி இவரது பாணியில் விமர்சிப்பார்.
உப்புக்காத்து., சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ், யாழினி அப்பா, போன்றவை இவரது தனித்துவ அடையாளங்கள். இவரது வெற்றிக்கு அடையாளம் இவரது ப்ளாகை பலர் SPOOF பண்ணி எழுதியமையே.. 

1464 பேர் இவரை கூகுள் மூலம் தொடர்கிறார்கள்.
ALEXA RANK - Global 175,155  India Flag 34,166



அட்ராசக்க 
இந்த பதிவரின் பதிவை 2010 இல் இருந்து படித்து வருகிறேன். நான் அதிக நேரம் செலவழித்த ப்ளாகும் இது தான். 

இவரது 1432 பதிவுகளில் கண்டிப்பாக 98% இற்கு கிட்ட நான் வாசித்து இருக்கிறேன். 

அதிகமாக நான் ரசிக்கும் விடயங்களில் இவரின்  நகைச்சுவை கலந்த விமர்சனம், கிடாவெட்டுகள்  என்பன சூப்பராக இருக்கும். நல்ல ஞாபகத்தோடு படங்களின் வசனங்களையும் பகிர்வார்.

இவரை குறித்து வலையுலகில் இருக்கும் விமர்சனங்கள் தான் இவரது வெற்றி. பதிவுலகில் நான் பார்க்க அதிகம் தனி மனித தாக்குதல் அல்லது சர்ச்சைகளில் (28 சக பதிவர்களின் பதிவு - நன்றி அட்ராசக்க) அதிகம் சிக்கியவர் என்றால் அது சி.பி. தான். இருந்தாலும் மனுஷன் ப்ளாக் ரீதியில் (தனிப்பட்ட ரீதியில் பாதிக்க பட்டிருந்தால் மன்னிக்கவும்) அதை இலகுவாக TAKE IT EASY POLICY யாக விட்டு விடுவார். 

அவருடைய பெரும்பாலான பதிவுகளில் நகைச்சுவை, கிண்டல்கள், கலாய்ப்புகள் செமையாக இருக்கும்.

என்னை பொறுத்தவரை தமிழ் வலையுலகின் சூப்பர் ஸ்டார் இவர் தான்..

ALEXA RANK - Global 78,257 India Flag 8,974

மேலே எனக்கு பிடித்த பிளாக்குகள் பற்றி பகிர்ந்து கொண்டேன். நான் அதிகமாக PAGE VIEWS செய்த ப்ளாகுகள் அவையே.

நான் விரும்பி படிக்கும் வேறு சில பிளாக்குககளை பற்றி உங்களோடு பகிர விரும்புகிறேன்..


உண்மைத்தமிழன்
 

இவரது வலையுலக வாழ்க்கை 2007 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆரம்பத்தில் அனைத்து விதமான பதிவுகளையும் அளித்தவர இப்போது சினிமா விமர்சனங்களில் முழு ஆர்வம் காட்டுகிறார். வலையுலகில் சிறந்த விமர்சனங்களை தருவதில் முதன்மை ஆனவர் என்று சொல்லலாம். ஒரு படத்தை நாம் பார்க்கும் முன்னர் படத்தை முழுதாக சொல்லா விட்டாலும் அதன் தாகத்தை கிட்டத்தட்ட எழுத்துக்கு கொண்டு வருவதில் கில்லாடி.. வலையுலகில் சீனியர் என்று கூட சொல்லலாம்.

ALEXA RANK - Global 356,342  India Flag 50,580



கேபிள் சங்கர்



 பதிவுலகில் அதிக VIEWS  ஹிட்டடிதவர் (5000000- சைபர் கணக்கு சரியோ தெரியல ஹி ..ஹி ..). நல்ல எழுத்தாளர். எழுத்துகளில் தனித்துவத்தோடு மிளிர்கின்றமையால் வலையுலகில் தனித்துவ அடையாளத்தோடு இருக்கிறார். இவரது சினிமா விமர்சனங்கள் கூட சூப்பராக இருக்கும். 

உதாரண கேபிளின் கதை, சாப்பாட்டுக்கடை, நான் - ஷர்மி - வைரம், கொத்து பரோட்டா இவரது தனித்துவ அடையாள ஹிட்டுகளாகும்.

ALEXA RANK - Global 90,190  India Flag 14,881



நாற்று 



இலங்கை பதிவர் ஆகவே தனிப்பட்ட ரீதியில் என்னை  மிக கவர்ந்த எழுத்துக்கள்.. இலங்கையை பற்றிய கட்டுரைகளில் மிக கடுமையான கருத்து பிரயோகங்களை (மண்டை ஓடுகளில் ரத்தம் குடித்த சிங்களப் பேய்களும் ப...) இணைத்து எழுதுகின்ற பதிவர். மேலும் ஆங்காங்கே சூடான பதிவுகளும் (என்னை கெடுத்த பொண்ணுங்கள் - சூடான & சுவையான தொகுப்...), கவிதை மொழியில் பதிவுகளும் அருமையாக இருக்கும்.. 

இவரது பதிவின்  தலைப்புக்கள் இரண்டு சொற்களில் அடங்கி நான் பார்த்ததே இல்லை.

ALEXA RANK - Global 258,768 Sri Lanka Flag 2,721 



குசும்பு 



ஒரு நகைச்சுவை பதிப்பு தேடுகிறவர்களுக்கு செமையான ஒரு இடம் குசும்பு. குசும்பு பண்ண மட்டுமே திறக்கபட்ட  பிளாக். PHOTO COMMENTS இற்கு இவரை அடித்து கொள்ள ஆளே இல்லை. ஏற்ற சூழ்நிலைகேற்ப யாராக இருந்தாலும் மனுஷன் கலாய்த்து விடுவார் (2007 ஆம் ஆண்டு பதிவு- இந்திய கிரிக்கெட் அணி.) 

ஒரு நகைச்சுவை உணர்வோடு உள் செல்லாதவர்களே தங்களை மறந்து சிரிக்க கூடியவாறு அவரது ஏதாவது பதிவு வைத்து விடும். 2007 இல் இருந்து பதிவெழுதும் பதிவர் ஆனால் இப்போது அடிக்கடி  எழுதுவது குறைவு)

ALEXA RANK - Global 6,491,097 



கும்மாச்சி 



சமகால நிகழ்வுகளை நகைச்சுவை பாணியில் கலந்து தரும் பிளாக் இது. ஒரு கிண்டல், மொக்கை பாணியில் இவரது எழுத்துக்கள் இருக்கும். இவரது பதிவுகளை கூட நான் ஒன்று விடாமல் படித்து இருக்கிறேன்.

கலக்கல் காக்டெயில், பயோடேட்டா என்பன இவரது தனித்துவ அடையாள பதிவுகள்.

ALEXA RANK - Global 1,130,244  India Flag 134,249



!தமிழ்வாசி!



"வரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ..." என்ற பதிவின் மூலமாக அறிமுகம் ஆகிய பிளாக் இது. மிக  எளிய மொழி நடையே இவரது பலம். இவரது பதிவுகளை வாசிக்கையில் மூளைக்கு வேலை உள்ள இடங்களில் கூட தன்னுடைய எழுத்து நடையால் சொல்ல வந்த கருத்தை பதித்து விடுவார். பழமொழி, விடுகதைகள் ஆங்காங்கே பரவி இருப்பார்..

பொதுவாக இவர் பதிவர்களை பற்றி எழுதும் சந்தோஷ, கலாட்டா சந்திப்புக்கள் , நேர்காணல்கள் மற்றும் பதிவுகள் நான் அவர்கள் குழுவில் இல்லையே என்ற ஏக்கத்தை என் மனதில் ஒரு கணம் தோற்றுவித்து செல்லும்.

 ALEXA RANK - Global 297,959 India Flag 44,048



விக்கியின் அகட விகடங்கள் 
 
 


2011 ஆம் ஆண்டு ஒரு சில நாட்கள் நான்கைந்து மணித்தியாலங்கள் தொடர்ந்து இவரது பதிவுகளை வாசித்து இருக்கிறேன் (கிச்சிளிக்காஸ்!). இப்போதும் பதிவு போட்டால் உடனே வாசித்து விடுவேன். சினிமா சாயல் (பெரும்பாலும்)  தவிர்த்து எழுதப்படும் பதிவுகள் இவருடைய ஸ்பெசல்.

இவரது கமெண்டுகள் மற்றவர்களுடைய பதிவுகளில் இடும் போது அவரது PROFILE போட்டோ நிமித்தம் நகைச்சுவை கமெண்டில் கூட எனக்கு சிரிப்பு வருவதில்லை. (ஹி ஹி ).

ALEXA RANK - Global 466,916 India Flag 93,206

தொடரும்..

பேஸ்புக் மூலம் கருத்துக்களை தெரிவியுங்கள்

36 comments:

  1. நன்றி நண்பரே..

    ReplyDelete
  2. என்னை உங்கள் விருப்பமான பட்டியலில் இணைத்தமைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. கடந்த ஒரு வருடமாகவே என் விருப்ப பட்டியலில்இருகிறீர்கள் அண்ணா ..

      Delete
  3. //தலைப்புக்கள் தெரிந்தேடுப்பிலும் மனுஷன் கில்லாடி..
    //

    அப்படிலாம் இல்ல நண்பா .. இதுஎல்லாம் நண்பர் சி பியிடம் கற்றுகொண்டவை தான்

    ReplyDelete
  4. // ALEXA RANK - Global 2,246,320
    //

    நான் அலெக்ஸ ரேங்க் ல இருப்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும் ...நன்றி

    ReplyDelete
    Replies
    1. இணைய தளம் / பிளாக் வைத்து இருக்கும் எல்லாரும் இருக்கிறார்கள் அண்ணா..

      Delete
  5. உங்களுக்காக சிறு தகவல் .. எனது பிளாக் இல் கடைசியில் திரட்டிகளின் தொகுப்பு உள்ளது அதில் அனைத்திலும் உங்கள் பதிவை இணையுங்கள் ..நிறைய வாசகர்கள் வருவார்கள்

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிறேன்.. நன்றி உங்கள் கமென்ட் இற்கு..

      Delete
  6. ம்ம்ம்ம்..... நடத்துங்க ஹாரி,.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தமிழ்மனம் இந்த வார டாப் 20 யில் ஹாரி இடம்பெற்றதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. Replies
    1. Yes anna.. I love cable anna blog ,kummachi anna blog, unmai thamilan blog, thamilvaasi blog I visited that blogs severaly. And I leave free 2 places for that kind of blogs anna..

      Delete
  9. நல்ல பதிவு ... கவுன்டவுன் தொடரட்டும் ...

    ReplyDelete
  10. 2 புதிய தளங்கள் அறிந்து கொண்டேன் நன்றி

    ReplyDelete
  11. என்னையும் தங்கள் விருப்பப்பட்டியலில் இணைத்தமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. வலைமனை, அப்துல்பாசித்(பிளாக்கர் நண்பன்) பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  13. 2 இடங்கள் நீங்க மறந்துட்டீங்க போலனு நெனச்சு சுட்டிக்காட்ட கீழ வந்தேன்..

    //டாப் 10 என்று விட்டு 2 இடங்கள் காலியாக இருக்கிறது என்று யோசிகிறீர்களா? அது நான் மறந்த இரண்டு பதிவர்களுக்கானது . [ஹி .. ஹி .. கிரேட் எஸ்கேப்]
    //

    கிரேட் எஸ்கேப் தான் போங்க..
    :-)

    ReplyDelete