Breaking News
Loading...

Followers

Monday, February 18, 2013

Info Post
மொக்கை வித் ஹாரி - 003

இரு நாள் ஏழு படம் 

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவில் 180 படம் வருடத்திற்கு தியேட்டரில் ரிலிஸ் ஆனால் இங்கு 40 - 50 க்கு குறைவான படங்களே ரிலிஸ் ஆகும். அதிலும் நடிகர் பலம், இயக்குனர் பலம் உள்ள படங்கள் தான் அதிகம் ரிலிஸ் ஆகும். ஆகவே தியட்டரில் தான் போய் படம் தான் படம் பார்க்க வேண்டும் என்ற மனுதர்மம் இங்கு சாதா படங்களுக்கு அவசியபட்டதில்லை.

அதிலும் ஆங்கில படங்கள், அனிமேசன் படங்கள் என்றால் DVD யே, இல்லை டவுன்லோடே..

எங்காவது தியேட்டர் முதலாளிகள் எடுக்கும் பிரமாண்ட மொக்கை படங்களை மட்டும் போய் பார்த்து கொள்வது. அதுவும் எங்க சொந்த ஊர்ல இருந்தால் அதுவும் தடா..

கடந்த சனிக்கிழமை நேரத்துக்கே பரீட்சை முடிந்திருந்தது, வீட்டில் வேறு தனிமை. ஸோ இந்த வருடம் நான் பார்த்த சினிமா எண்ணிக்கையை 6 லிருந்து 16 க்கி விட பெரும் பிரயத்தன பட்டு வாங்கிய DVD களை தூசு தட்டி ஒளிபரப்ப  ஆரம்பித்தேன்.

முதலில் ஜேம்ஸ் தாதாவின் SKYFALL (தாதாவா??? தாத்தாவா???)

ஜேம்ஸ் பாண்ட் பழைய படங்கள் அதிகம் பார்த்ததில்லை. டோனி கிரெய்க் நடித்த கடந்த இரண்டு பாகங்கள் மட்டும் பார்த்து இருந்தேன். இரண்டுமே எதோ ஒருவகையில் பிடித்து இருந்தது. ஸோ மிக நீண்ட நாட்களாக ஹார்ட் டிஸ்கில் உறங்கி கொண்டு இருந்த படத்தை தட்டி எழுப்பி...

 வழமை போல ஜேம்ஸ் பாண்டிற்குரிய வேகம் முதல் 15 நிமிடங்களிலும் கடைசி 15 நிமிடங்களிலுமே வருகிறது. மற்றவை எல்லாம் ஏதோ.. ஏதோ.. காட்சிக்கு மட்டும் வருது..

முதலில் ஜேம்சிற்கு அடித்தால் நாம் அடுத்த அடி எப்போது அடிப்பார் என்று பார்ப்போம். ஆனால் இந்த படத்தில் யோவ் அந்த வயசானவர ஏன்யா கொடும படுத்தி ஓட வைக்கிறிங்க என்றே கேட்க தோணுகிறது..

ஆனாலும் எனக்கு நல்ல என்டேர்டைன்மென்ட்..

பார்க்கலாம்..

கடல் 



அர்ஜுன் ஹீரோ, அரவிந்த சாமி செகண்ட் ஹீரோ, பாடல்களையும் காட்சிகளையும் கடத்த நம்ம கார்த்திக், ராதா வாரிசுகள்..

பழனி மலையில் இருந்து பரங்கி மலைக்கு மணியின் ஜம்ம்பிங் அட்டெம்ப்ட்.. எனக்கு பரவாயில்லை ரகம் தான்.

பிடிச்சு இருக்கும் அர்ஜுன் அரவிந்த சாமி கதையை மட்டும் முழுமையாகவும் அழுத்தமாகவும் இன்னும் நகர்த்தி இருந்தால்..

லூசு பெண் கேரக்டருக்கு இல்லாத ஹீரோயின்ஸா மணி சார்?? இந்த பொண்ணு லூசு தனம் பண்ணுனா சிரிப்பு வரல.. பதிலுக்கு

PPPஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தான் வருது..

அஸ்தமனம் 

போர்க்கள இயக்குனரின் ரெண்டாம் படம். அஞ்சு பேரும், கையில் கமெராவும் WRONG TURN DVD யும் கையில் இருந்தால் அஸ்தமனம் ரெடி.. ஒரே ஆறுதல் படம் வெறும் 1.11 மணி துளிகள் தான்..

சக்தி 

ஜூனியர் NTR , பிரபு நடித்த படம் OPENINGகே மாஸ் மொக்கையாய் இருந்த படியாலும் அஸ்தமனம் தந்த அடியாலும் உடனே ..றிற்மா

புதுமுகங்கள் தேவை 

எப்போதோ டாப் டென்னில் போட்ட ஞாபகம். உண்மையிலே மாத்தி யோசித்து எடுக்க ட்ரை பண்ணி இருக்கிறார்கள். சினிமாவிற்குள் இன்னொரு சினிமா, அதற்குள்ளும் இன்னொரு சினிமா.. அதற்குள்ளும்...

 ஒரு படம் பப்ளிக் டால்க் மூலம் ஹிட் ஆகும் என்று அவர்கள் படத்தில் காட்டி இருந்தாலும் 2 கோடி டிவி விளம்பரம் இல்லாட்டா இப்போ எந்த படமா இருந்தாலும் டப்சா தான்..

மற்ற படி உண்மையில் நல்ல படம்..

குறி 

விதி வலியது

காட்டு புலி 

மேலே உள்ள அஸ்தமனத்தில் அர்ஜுனை சேர்த்தால் கொருக்கா புளி ரெடி..


மேலுள்ளவற்றில் SKYFALL, புதுமுகங்கள் தேவை தவிர எல்லாம் மரன்ஸ் மொக்ஸ்..

பேஸ்புக் மூலம் கருத்துக்களை தெரிவியுங்கள்

14 comments:

  1. //பழனி மலையில் இருந்து பரங்கி மலைக்கு மணியின் ஜம்ம்பிங் அட்டெம்ப்ட்.. எனக்கு பரவாயில்லை ரகம் தான்.//

    இத்தன மொக்க படம் பாத்ருக்கியே ரொம்ப வெட்டியா இருக்கியா என்ன (h)

    ReplyDelete
    Replies
    1. தம்பி அந்த கடல் படத்த தான் உங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என்று ஒரு பதிவு போட்டு இருந்தீகளே..

      Delete
  2. ஏழு படத்தையும் ஏழு செகண்ட்ல பார்த்து முடிச்சாச்சு உங்க விமர்சனத்தில.

    ReplyDelete
  3. நல்ல அலசல்! இயல்பான எழுத்துநடை ஹாரி! கடல் இன்னும் நான் பார்க்கவில்லை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணி அண்ணா மனம் திறந்த பாராட்டுக்கு

      Delete
  4. // கொருக்கா புளி// கொடுக்கா புளி அல்லவா

    ReplyDelete
    Replies
    1. விடுங்க பாஸ்.. ஏன் மொக்கை பதிவில என்னோட மொக்கை மிஸ்டேக்ஸ்.. :)) :)) :)) :))

      Delete
  5. ஹா..ஹா. எல்லாமே மொக்கைப் படங்களாகத்தான் பார்த்திருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஆமா தலைவரே

      Delete
  6. 10,000 kodi, ramdoss .yellaam yenge...seekkiram kondaanga...........

    ReplyDelete
    Replies
    1. 10000 கோடி பற்றி விரைவில்

      Delete